என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., - விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 28 أبريل 2022

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., - விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,

ஜலந்தரில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மானுடவியல் மற்றும் மேலாண்மை துறை எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு: மாஸ்டர் ஆப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் - 2 ஆண்டுகள்

பிரிவுகள்: மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பினான்சியல் மேனேஜ்மெண்ட்.

தேர்வு செய்யப்படும் முறை:

இளநிலை பட்டப்படிப்புடன் கேட், ஜிமேட், சிமேட், மேட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்கும் மாணவர்களது குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களும் மாணவர் சேர்க்கையின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேற்கண்ட நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு கல்வி நிறுவனத்தில் பிரத்யேக நுழைத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4

நுழைவுத்தேர்வு நாள்: மே 14

விபரங்களுக்கு: www.nitj.ac.in

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.