இன்சூரன்ஸ் படிப்புகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 20 أبريل 2022

இன்சூரன்ஸ் படிப்புகள்

இன்சூரன்ஸ் படிப்புகள்
 
ஜோத்பூர் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் இன்சூரன்ஸ் ஸ்டடீஸ் வழங்கும் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படுள்ளது.


படிப்புகள்:

எம்.பி.ஏ., - மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (இன்சூரன்ஸ்)

பி.ஜி.டி.ஐ.ஆர்.எம்., - போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் இன்சூரன்ஸ் (ரிஸ்க் மேனேஜ்மெண்ட்)


தகுதிகள்:

எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற, 10ம், 12ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை டிப்ளமா படிப்பில் சேர்க்கை பெற, 10ம் மற்றும் 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதோடு, குறிப்பிட்ட இளநிலை பட்டப்படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


மேலும், இரண்டு படிப்புகளுக்கும் 2020 அல்லது 2021 அல்லது 2022ம் ஆண்டில்  கேட், மேட், சிமேட் ஆகிய ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கவும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15


விபரங்களுக்கு: http://nlujodhpur.ac.in/

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.