அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 29 أبريل 2022

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என, ஐந்து ஒன்றியங்களில் தொடக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, மொத்தம், 587 அரசு பள்ளிகள் உள்ளன.

இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 369 அரசு தொடக்கப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில், 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவ - மாணவியர் சேர்க்கை, கல்வி கட்டணம் எதுவுமின்றி துவங்கியுள்ளது.

மாணவர் சேர்க்கை குறித்து, அந்தந்த பள்ளிக்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில், &'பள்ளியில் கட்டணமின்றி சேரும் மாணவ - மாணவியருக்கு பாடப்புத்தகம், நோட்டு, வண்ண பென்சில், புத்தகப்பை, சீருடை, ஷூ, ஐ.டி., கார்டு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்&' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.