நாளை நள்ளிரவுடன் காலக்கெடு முடிகிறது - குரூப் 4 தேர்வுக்கு 15.67 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 26, 2022

நாளை நள்ளிரவுடன் காலக்கெடு முடிகிறது - குரூப் 4 தேர்வுக்கு 15.67 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நாளை நள்ளிரவுடன் முடிகிறது. இதுவரை குரூப் 4 தேர்வுக்கு 15.67 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. 15.67 லட்சம் பேர் விண்ணப்பம்

மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி என்பதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(28ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவுடன் காலக்கெடு முடிகிறது

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை(5 மணி நிலவரப்படி) 15 லட்சத்து 67 ஆயிரத்து 651 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி நள்ளிரவு வரை கால அவகாசம் உள்ளது. இதனால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். கடைசி நாட்களில் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார் போல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.