TRB ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 17 مارس 2022

TRB ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006

பத்திரிக்கை செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை (அறிவிக்கை எண். 14/2019) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும், online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன. தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாக கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு (11.03.2022 முதல் 18.03.2022 வரை) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை கால அவகாசம் விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. கோரி பதிவேற்றம் செய்திட கூடுதல் எனவே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.03.2022-லிருந்து 25.03.2022 ஆக நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மற்ற கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. கோரிக்கைகளுக்கான உரிய பதில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நாள் : 17.03.2022

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.