ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பள்ளி முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கோபிச்செட்டிபாளையம் கச்சேரிமேட்டில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 25-ம் தேதி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின்போது ஆசிரியர் சுப்பிரமணி மாணவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவர்களின் மோதலை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க காரணமான பெற்றோர் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரியர் மீதான இடைநீக்கம் விளக்கி கொள்ளப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரியர் மீதான இடைநீக்கம் விளக்கி கொள்ளப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.