பள்ளி மாணவி தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 29 مارس 2022

பள்ளி மாணவி தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் காசிமாயன் (39). இவரது மூத்த மகள் சஞ்சனா (15). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சிலோன் காலனி பகுதியில் தன்னார்வலர்கள் குழு சார்பில் நடந்த குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் நடன போட்டியை பார்க்க செல்வதாக மாணவி சஞ்சனா தனது தாயிடம் கூறியுள்ளார். இதையும் படிக்க | G.O.(Ms) No.28 Dt: March 15, 2022 - Rural Development and Panchayat Raj Department

இதற்கு, மாணவியின் தாய் போகக்கூடாது என கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மாணவி மனவருத்தத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சஞ்சனா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.