அகவிலைப்படி உயர்வுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 18 مارس 2022

அகவிலைப்படி உயர்வுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி

அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியப் பயன்களை அரசு ஊழியர்களுக்கு வழங்க, பட்ஜெட்டில் கூடுதலாக, 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | SMC Sample Meeting Agenda 20.03.2022

அரசின் ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில், ஓய்வூதியதாரர் மரணத்தின் போது, அவரது குடும்பத்தினருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றால், இத்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஓய்வூதியதாரர் குடும்பத்தினர் நலன் கருதி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நேர் செய்ய, ஒரு சிறப்பு ஒதுக்கீடாக, 50 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை, அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும், ஓய்வூதியப் பயன்களை வழங்குவதற்காகவும், பட்ஜெட்டில் கூடுதலாக, 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.