மாணவர்களுக்கு நற்செய்தி.. வெளியானது அருமையான அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 29 مارس 2022

மாணவர்களுக்கு நற்செய்தி.. வெளியானது அருமையான அறிவிப்பு.

கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால், அதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்க உள்ளது.

இந்த படிப்புகளில் சேர விரும்புவோர், இந்த நிறுவனத்தின் www.ulakththamizh.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கான சேர்க்கை கட்டணம் 3100 ரூபாய். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதும் கிடையாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் டிடியும், பள்ளி கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்று நகல்கள் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். அத்துடன், வாட்ஸ்அப் எண் குறிப்பிட்டும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நேரடியாக நடக்கும். இதுகுறித்து கூடுதல் தகவல் பெற விரும்புவோர் 044-22542992 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.