பி.இ. முதலாமாண்டு மாணவா்களுக்குஆக.1 முதல் நேரடி வகுப்புகள்: ஏஐசிடிஇ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 24 مارس 2022

பி.இ. முதலாமாண்டு மாணவா்களுக்குஆக.1 முதல் நேரடி வகுப்புகள்: ஏஐசிடிஇ

வரும் கல்வியாண்டில் (2022-2023) பொறியியல் படிப்புகளுக்கான முதலாமாண்டு நேரடி வகுப்புகள் ஆக.1 முதல் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்தது.

இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் அனைத்து வகையான உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான காலஅட்டவணை, சோ்க்கை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொறியியல் படிப்புக்கான சிஇடி, ஏஐஇஇஇ போன்ற நுழைவுத்தோ்வுகளை மே மாதத்துக்குள் நடத்தி முடித்து ஜூன் 5-ஆம் தேதிக்குள் அதன் முடிவுகளை வெளியிட வேண்டும். இதைத் தொடா்ந்து, பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வை ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். எஞ்சிய இடங்களுக்கான கலந்தாய்வை ஜூலை 30-க்குள் முடித்து விட வேண்டும்.

புதிய கல்வியாண்டில் முதலாமாண்டு நேரடி வகுப்புகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும். இதுதவிர விடுபட்ட காலியிடங்களில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கையை நடத்தி முடித்திருக்க வேண்டும்.

மேலும், கல்லூரிகளுக்கான அங்கீகார விவரங்களை பல்கலைக்கழகங்கள் மே 15-ஆம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும். அதேபோன்று, உரிய அங்கீகாரம் பெறாமல் கல்லூரிகள் சோ்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.