முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 فبراير 2022

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்,



முதுகலை ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து. 1.அரசாணை எண் 525, பள்ளிக் கல்வி (டி1) துறை நாள் 29.12.1997. 2.அரசாணை எண் 46 பள்ளிக் கல்வி (க்யூ2) துறை நாள் 14.05.2004. 3.அரசாணை எண் 231, பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010. 4. அரசாணை(1டி) எண் 217, பள்ளிக் கல்வி (பக5(1)) துறை நாள்

பார்வை

20.06.2019. பார்வை 160 காண் அரசாணை எண் 525ன்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது 01.08.2019 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்பட்டதைப் போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி முதலாவதாக 1 முதல் 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும் அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல் பிரிவும், ( BIFURCATION) என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். காண் அரசாணை 46ன்படி ஆசிரியர்கள் பாடவேளைகள் பார்வை 200 அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் என வாரத்திற்கு 24 பாடவேளைகள் எனவும், இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள் என வாரத்திற்கு 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. பார்வை 4ல் காண் அரசாணை 217ல் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பிரிவுகளைப் பொறுத்தவரை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும். மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி/மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்த பட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 61-100 மாணவர்கள் வரை இரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது. குறைந்த பட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடவேளைகள் கணக்கிடுதல். ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓராசியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மேல்நிலை' வகுப்புகளில் !! மொழிப்பாடத்தில் வாரத்திற்கு 24 பாடவேளைகள் எனவும், இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம் வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கூடுதல் தேவை பணியிடங்கள். மொழிப்பாடத்தில் 24பாட வேளைக்கும், முதன்மைப் பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம். மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தவறாது 01.08.2021 S DIGIT நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் சார்பான பணியாளர் நிர்ணய விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில் நேரில் உரிய பிரிவில் (W2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.