காலாவதி பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு முகாம் - நாளை முதல் மார்ச் 25 வரை நடக்கிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 6 فبراير 2022

காலாவதி பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு முகாம் - நாளை முதல் மார்ச் 25 வரை நடக்கிறது

வாடிக் கையாளர்கள் தங்களின் காலாவதியான பாலிசி களை புதுப்பித்து கொள்வ தற்கான சிறப்பு முகாமை நாளை முதல் மார்ச் 25ம் தேதி வரை எல்ஐசி நடத் துகிறது.

நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக இந்த முகாமை எல்ஐசி நடத் துகிறது. இந்த சிறப்பு முகாமில் சில தகுதியான திட்டங்களின் கீழ் உள்ள காப்பீடுகள், குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட் பட்டு, செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதி யிலிருந்து 5 ஆண்டுகளுக் குள் உள்ள பாலிசிகள் புதுப்பிக்கப்படும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

வழக்கமான மற்றும் மருத்துவ காப்பீடுகளுக் கான மொத்தம் பெறப் பட வேண்டிய 1 லட்சம் வரையிலான பிரீமியம் தொகைக்கு 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 2,000, இந்த தொகை 71,00,001 முதல் 73,00,000 வரையிலான பிரீமியம் தொகைக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 2,500, 73,00,001க்கு மேல் 30சதவீதம் அல்லது அதிக பட்சமாக 73,000 தாமதக் கட்டண சலுகை வழங்கப் படும்.

இதுவே மைக்ரோ காப்பீட்டு திட்டங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு 100 சதவீதம் அல்லது அதிகபட்சமாக முழுத் தொகைக்கும் தாம தக் கட்டண சலுகை வழங் கப்பட உள்ளது. முகாம் குறித்த கூடுதல் விவரங் களை அறிய www.licindia. in மூலம் அறியலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.