ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை - தீர்மானம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 6 يونيو 2023

ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை - தீர்மானம்!

ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை - டிட்டோஜேக் கூட்டத்தில் தீர்மானம்!

டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்

(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(2)தமிழக ஆசிரியர் கூட்டணி.

(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(5)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(சண்முகநாதன்).

(6)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(தியோடர்).

(7)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(8)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(9)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

(10)தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

ஆகியவை சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.

தமிழக முதல்வர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் இயற்றப்பட்டது.

(1)12.6.2023 ல் வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.



(2)26.6.2023 ல் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.

(3)14.7.2023 ல் மாநில தலைநகரில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குதல்.

(4)மீண்டும் டிட்டோஜேக் கூட்டத்தை 18.6.2023 ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் கூட்டுதல்.

هناك تعليق واحد:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம். பாட அறிவு இல்லாமல் பதவி உயர்வு பெற்று என்ன செய்வீர்கள்? உங்களுக்கு மூன்று சதவீதம் சம்பள உயர்வுக்கு மாணவர்கள் நலனை காவு வாங்காதீர்கள் சங்கம் ஸ்

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.