புத்தகம் வைத்து பாடம் நடத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு CEO கறார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 أغسطس 2022

புத்தகம் வைத்து பாடம் நடத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு CEO கறார்

''பள்ளி வகுப்பறைகளில் பாடப் புத்தகம் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தக் கூடாது; பாடக் குறிப்புகள் வைத்து மட்டுமே நடத்த வேண்டும்'' என முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டார்.

மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் சி.இ.ஓ., தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் ராகவன், விஜயா, கோகிலா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, பாலமுருகன் பங்கேற்றனர்.

சி.இ.ஓ., பேசியதாவது:ஆசிரியர்கள் தினமும் பாடக் குறிப்பும், வாரந்தோறும் 'லெசன் பிளான்' தயாரிப்பதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது புத்தகம் பயன்படுத்த கூடாது; பாடக்குறிப்பு வைத்தே நடத்த வேண்டும். மேலும் தொடர்புடைய பாடக்கருவிகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

மாணவர், ஆசிரியர் வருகை பதிவு எமிஸில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகள் வைக்க கூடாது, என்றார். போக்சோ சட்டம் தொடர்பாக 'சைல்டு வெல்பர் கமிட்டி' தலைவர் விஜயசரவணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

هناك تعليقان (2):

  1. ஐயா வணக்கம் புத்தகத்தில் ஒரு மதிப்பெண் குறிக்க வேண்டும்.

    ردحذف
  2. அப்போ தமிழ்.ஆங்கிலம்.சமூக அறிவியல் ஆசிரியர் நிலம கடவுளே

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.