ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவி வகித்த 1ம் வகுப்பு மாணவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 2 أبريل 2022

ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவி வகித்த 1ம் வகுப்பு மாணவி

ஒருநாள் தலைமை ஆசிரியர்

மானாமதுரையில் ஒருநாள் தலைமை ஆசிரியராக இருந்த 1ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மானாமதுரை சியோன் நகர் பகுதியை சேர்ந்தவர் தீபபிரபா,6, இவர் மானாமதுரை பர்மா காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று காலை பள்ளிக்குச் சென்றபோது பள்ளிக்குள் ரூ.50 கிடந்ததை பார்த்து அதனை எடுத்து அவரது வகுப்பு ஆசிரியை ராமலெட்சுமி வந்ததும் கொடுத்துள்ளார். மாணவியின் செயலை பாராட்டிய ஆசிரியர் ராமலெட்சுமி, இது குறித்து தலைமையாசிரியர் ஞானசேகரனிடம் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும் பாராட்டு

அவர் அந்த மாணவியை அனைத்து வகுப்புகளுக்கும் அழைத்து சென்று மற்ற மாணவர்களிடம் அவரது செயலை எடுத்துக் கூறி இந்த மாணவியை போல் அனைத்து மாணவர்களும் இருக்க வேண்டும் என்றார். அவரது செயலை பாராட்டும் விதமாக நேற்று ஒரு நாள் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார்.

அம்மாணவியை பள்ளி தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர வைத்தார். ஒருநாள் தலைமைஆசிரியராக இருந்த மாணவி தீப பிரபாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

هناك تعليق واحد:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.